சர்ச்சையில் முடிந்த மறுமணம் - முதன் முறையாக மனம் திறந்தார் அமலா பால்..!

வியாழன், 23 ஏப்ரல் 2020 (14:49 IST)
தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இவர் மைனா, தலைவா, ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கிரீடம், தெய்வத்திருமகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை திடீரென திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன விஷயத்தை அமலா பால் ரகசியமாக வைத்திருக்க நினைந்தார். அதற்குள் பவ்னிந்தர் சிங் இன்ஸ்டாகிராமில் திருமணம் ஆன புகைப்படங்களை பதிவிட்ட ட்ரெண்ட் ஆனது. இதனால் பவ்னிந்தர் மீது கோபமடைந்த அமலா பால் அவரை பின் தொடர்வதையே நிறுத்தி விட்டார் என்றெல்லாம் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தாலும் இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதி காத்துவந்தார் அமலா பால். அமலா பால் வாழ்க்கையில் என்ன தான் நடக்கிறது என்று யாராலும் யூகிக்க முடியவில்லை..

இந்நிலையில் தன் திருமணம் குறித்த பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதவது, " எனக்கு இப்போதைக்கு கல்யாணம் கிடையாது. நான் ஒரு சில படங்களில் கமிட்டாகி இருக்கிறேன். அதை முடித்த உடனே என்னுடைய திருமணத்தை பற்றி நான் கூறுகிறேன். தயவு செய்து யாரும் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். யாரும் கேட்காமலேயே என்னுடைய காதல் குறித்து தெரிவித்திருந்த நான் அதே போன்று நேரம் வரும் போது திருமணத்தை குறித்தும் கூறுவேன் என தெரிவித்தார். இதற்கிடையில் கடந்த இரு தினங்களாக "உனக்கு நீ மட்டும் தான் பெஸ்ட். ஹீரோ, ஹீரோயின், தோழி, சோல் மேட் எல்லாமே உனக்கு நீ மட்டும் தான். தனக்குத் தான் மட்டும் தான் என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மரத்தை பார்த்தாலே இடுப்பு காட்டுறது இல்ல கட்டிப்பிடிக்குறது - மளவிகாவிற்கு இதே வேலையா போச்சு!