Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னைக் கொலை செய்து ஆட்சியைப் பிடிக்க திட்டமா? மம்தா ஆவேசம்!

என்னைக் கொலை செய்து ஆட்சியைப் பிடிக்க திட்டமா? மம்தா ஆவேசம்!
, செவ்வாய், 16 மார்ச் 2021 (19:04 IST)
மேற்கு வங்கத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திருணாமூல் காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஏபிபி நடத்திஉய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 150 முதல் 166 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மம்தா காரில் வந்த போது தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பிரச்சாரம் செய்து வருகிறார். பன்குரா தொகுதியில் பேசிய அவர் ‘பாஜக இங்கு ஆட்சிக்கு வந்தால் உங்கள் எல்லா உரிமைகளும் பறிபோகும். எல்லா மத்திய அமைச்சர்களும் இங்கு முகாமிட்டுள்ளனர். கொரோனா சூறாவளி வீசிய போது அவர்கள் எங்கு போனார்கள். நாட்டின் உள்துறை அமைச்சர் மேற்கு வங்கத்தில் அமர்ந்து சதி செய்து வருகிறார். அவர்களுக்கு என்ன வேண்டும் என்னை கொலை செய்து அதன் பின்னர் ஆட்சியில் அமரப் பார்க்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் ஆண்டனி பட ஹீரோனுக்கு குவியும் பாராட்டுகள்...