Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காயம் பட்ட புலி ஆபத்தானது: மம்தா எச்சரிக்கை

Advertiesment
காயம் பட்ட புலி ஆபத்தானது: மம்தா எச்சரிக்கை
, ஞாயிறு, 14 மார்ச் 2021 (18:30 IST)
காயம்பட்ட புலி மிகவும் ஆபத்தானது என பாஜகவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் என்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் செய்த போது எதிர்பாராத விதமாக காயமடைந்தார் 
 
அவரது காயத்திற்கு மர்மநபர்கள் தள்ளி விட்டதே காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தனது பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். உடைந்த காலுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரத்தை தொடர்வேன் என மம்தா பானர்ஜி உறுதி கூறியுள்ளார்
 
மேலும் காயம்பட்ட புலி மிகவும் ஆபத்தானது என்றும் அவர் பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள்: ஒப்பந்தம் கையெழுத்து