ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன். இவரின் தந்தை மோகனன் பாலிவுட்டில் முன்னணி ஒளிப்பதிவாளராக திகழ்கிறார். அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.
இந்நிலையில் அவர் தற்போது பிரபாஸுடன் ராஜாசாப் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இந்த படம் பற்றி பேசியுள்ள மாளவிகா “வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது. ஒரு பாடல் இருக்கும். கொஞ்சம் அதிர்ஷ்டம் அடித்தால் இரண்டு பாடல்கள் கிடைக்கும். ஆனால் ராஜாசாப் படத்தில் எனக்கு நல்ல வேடம். ஒரு நடிகைக்கு இதுபோல வலுவான வேடம் அமைவது பெரிய விஷயம்” எனக் கூறியுள்ளார்.