Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில நல்ல படங்கள் கவனிக்கப்படாமல் போகக் காரணம் இதுதான்… பிரபல இயக்குனரின் கருத்து!

vinoth
வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (09:48 IST)
மலையாள சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளராக இருந்த மகேஷ் நாராயணன் பின்னர் இயக்குனராகவும் கால்பதித்து வெற்றி பெற்றார். விக்ரம் படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் இவர் இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதால் தற்போது மம்மூட்டி மோகன்லாலை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார்.

இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கதை கமல்ஹாசனுக்காக மகேஷ் நாராயணன் எழுதிய கதை என்று சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில நல்ல படங்கள் திரையரங்க வெளியீட்டின் போது கவனம் பெறாமல் ஓடிடியில் ரிலீஸாகும் போது சிலாகிக்கப்படுவது குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் “நான் சினிமாத்துறைக்குள் நுழைந்த போது மலையாள சினிமாவில் ஆண்டுக்கு நூறு படங்கள் ரிலீஸாகின. ஆனால் இப்போது ஆண்டுக்கு 200 படங்கள் ரிலீஸாகின்றன.ஆனால் திரையரங்குகள் எண்ணிக்கை அப்போது இருந்ததை விடக் குறைவாகதான் உள்ளன. இதனால் சில நல்ல படங்கள்  திரையரங்கக் காலத்தை வெகுவிரைவில் இழக்கின்றன.  திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமானால் இந்த பிரச்சனையை ஓரளவு சரிசெய்யலாம் என தெரிகிறது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாய்களை முறையாகப் பராமரிக்கத் தவறிய இந்த நாடு வெட்கப்படவேண்டும் –சதா கண்ணீர் பேச்சு!

மேடையில் பேசும்போதே கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன்!

’கூலி’ படம் எப்படி இருக்கிறது? ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த விமர்சனங்கள் இதோ:

துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் ‘கூலி’ படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்…வலுக்கும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments