Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா பயணம்: கமல்ஹாசன் வாழ்த்து!

Advertiesment
ரஜினிகாந்த்

Mahendran

, புதன், 13 ஆகஸ்ட் 2025 (15:17 IST)
திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த தனது நெருங்கிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, நடிகர் கமல்ஹாசன் தனது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்த பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், ரஜினியின் நடிப்பில் வெளியாக உள்ள 'கூலி' திரைப்படம் உலக அளவில் பெரும் வெற்றிபெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார். அவர் தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது:
 
திரையுலகில் அரை நூற்றாண்டு சாதனையைப் படைத்து, எனது அன்பான நண்பர் ரஜினிகாந்த் இன்று 50 பொற்கால ஆண்டுகளை நிறைவு செய்கிறார். எங்கள் சூப்பர் ஸ்டாரின் இந்த சாதனையை நான் அன்போடும், பெருமையோடும் கொண்டாடுகிறேன். இந்த பொன்விழா ஆண்டிற்கு பொருத்தமாக, அவரது கூலி திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
 
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் , இசையமைப்பாளர் அனிருத் மற்றும் எனது நீண்டகால நண்பர்களான சத்யராஜ், நாகார்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் ஆகியோரால் இந்த படம் உயிர்பெற்றுள்ளது. எனது அன்புக்குரிய மகள் ஸ்ருதிஹாசனுக்கும் ஒரு சிறப்பு வாழ்த்து. தொடர்ந்து பிரகாசமாக ஜொலிப்பாய்! இவ்வாறு கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
கமல்ஹாசனின் இந்த வாழ்த்து, தமிழ் சினிமா உலகின் இரண்டு ஜாம்பவான்களுக்கு இடையே நிலவும் நட்பையும், பரஸ்பர மரியாதையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளமை இனிமேல் போகாது… முதுமை எனக்கு வாராது –ரஜினியை வாழ்த்திய வைரமுத்து!