Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
, வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:29 IST)
மகேஷ் பாபு சமீபத்தில் நடித்த சர்காரு வாரிபாட்டா திரைப்படம் ரிலீஸாகி பரவலான கவனத்தைப் பெற்றது.

மகேஷ் பாபு நடிப்பில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மே 12 ஆம் தேதி ரிலீஸான சர்காரு வாரிபாட்டா திரைப்படம் கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவரின் அடுத்த படம் பற்றிய கேள்விகள் எழுந்தன. ராஜமௌலி இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்கான வேலைகளை ராஜமௌலி தொடங்கிவிட்டார். ஆனால் ஷூட்டிங் தொடங்க எப்படியும் ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்பதால் இப்போது மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.

திரிவிக்ரம் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதில் பூஜா ஹெக்டே, அமலா ஆகியோர் கலந்துகொண்டனர். இது மகேஷ் பாபுவின் 28 ஆவது படம். இந்த படம் அடுத்த அண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வெளியாகிறது பா ரஞ்சித்தின் அடுத்த பட டிரைலர்!