Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுமிதா விவகாரம்: மனித உரிமை அமைப்பில் வழக்கு - கம்பி எண்ணப்போகும் நபர் இவர் தான்?

Advertiesment
மதுமிதா விவகாரம்: மனித உரிமை அமைப்பில் வழக்கு - கம்பி எண்ணப்போகும்  நபர் இவர் தான்?
, வியாழன், 19 செப்டம்பர் 2019 (15:10 IST)
விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வழக்கத்திற்கு மாறாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.  16 போட்டியாளர்கள் பங்குபெற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது 7 பேர் தான் உள்ளனர். மற்றவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டு ஓட்டுகளை இழந்து வெளியேற்றனர். 


 
இதில் மதுமிதா வெளியேறியது பெரும் விவகாரமாக பேசப்பட்டது. காரணம் பிக் பாஸ் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தால் மதுமிதா விதியை மீறி செயல்பட்டதாக போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளார். பின்னர் குரூப் ராகிங் செய்து என்னை கொடுமைப் படுத்தினார்கள் அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கையை அறுத்துக்கொண்டதாக கூறினார்.  அந்த விவாகரத்தில் சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அனைவரும் சம்மந்தபட்டவர்கள் தான் என்று பகிரங்கமாக தெரிவித்தார் மதுமிதா. 

webdunia

 
இந்த நிலையில் தற்போது மதுமிதா குற்றச்சாட்டுகள் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்பில் புகார் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பை சேர்ந்த விஜயலக்ஷ்மி தேவராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே கூடிய விரைவில் மதுமிதா விஷயத்தில் சம்மந்தப்பட்டுள்ள அந்த 5 நபர்களிடம்  மனித உரிமை அமைப்பு விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருநங்கை நமீதாவின் துயரங்களை சொல்லும் நாடோடிகள் 2:பிரெஸ் மீட் ஸ்டில்ஸ்!