காவலரை திட்டியதற்காக மன்னிப்பு கேட்ட பிறகும் காஞ்சிபுரம் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மனித உரிமைகள் ஆணையம்.
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர் ஒருவரை பொதுவில் வைத்து ஒருமையில் திட்டினார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. பலர் இதற்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆட்சியர் பொன்னையா “உணர்ச்சிவசத்தில் பேசியதை பெரிதுப்படுத்த வேண்டாம்” என கூறி மன்னிப்பும் கேட்டிருந்தார்.
இந்நிலையில் காவலரை அவதூறாக பேசியது குறித்து இன்னும் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் ஆட்சியர் பொன்னையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.