Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

vinoth
செவ்வாய், 10 ஜூன் 2025 (10:27 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி. சமீபத்தில் ஒடிசாவில் இதன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த படத்தில் நெகட்டிவ் தன்மையுள்ள ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம்மை நடிக்க வைக்க ராஜமௌலி முயற்சி செய்தார். ஆனால் விக்ரம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இப்போது அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments