திரைப்பட நடிகராகவும், சமையற் கலைஞராகவும் அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஜாய் கிரிசில்டா என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் ஜாய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனக்கும் ரங்கராஜுக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் தற்போது தான் கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் ரங்கராஜ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்துப் பரபர திருப்பமான சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோய் கிரிசில்டா, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் நடந்தது அதன் பிறகு இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக ரங்கராஜ் தன்னுடன் பேசுவதைத் தவிர்த்து வருகிறார். அவர் தன்னுடைய முதல் மனைவியை சட்டப்படி பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். என்னுடைய குழந்தைக்கு அவர் பதில் சொல்லவேண்டும். அவர் என்னோடு வாழவேண்டும்.” எனக் கூறியிருந்தார்.
இது சம்மந்தமாக ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் தற்போது ஜாய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரங்கராஜ் ஹாய் பொண்டாட்டி. இப்பதான் வீட்டுக்கு வந்தேன். ஒரு மீட்டிங் முடிஞ்சிடுச்சு. ஒரு காஃபி குடிச்சேன். I miss you. …” என்றெல்லாம் ரொமான்ஸாகப் பேசியுள்ளார். இதனால் ஜாயின் குற்றச்ச்சாட்டின் மீதான் உண்மைத்தன்மை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த வீடியோவில் இருப்பது போல மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி மனைவிக்குப் ப்ரபோஸ் செய்வது என்று சின்னத்திரைக் கலைஞர் குரேஷி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் கமெண்ட் செய்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ் “டேய் ரொமான்ஸ் பத்தல. ரெண்டு வாரம் என்கிட்ட டிரைனிங் வாடா” என கலாய்த்துள்ளார்.