Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Your Time Starts Again: குழப்பும் மாநாடு டிரைலர்

Advertiesment
Maanaadu Trailer
, சனி, 2 அக்டோபர் 2021 (11:59 IST)
சிம்பு நடித்த‘மாநாடு’படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது. 
 
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் ‘மாநாடு’ படத்தின் டிரைலர் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநாடு பட டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீரியல் நடிகை வைஷாலிக்கு விரைவில் டும் டும் டும்!!