Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலீஸை நெருங்கும் மாமன்னன்… இன்னும் முடியாத வெளிநாட்டு பிஸ்னஸ்!

ரிலீஸை நெருங்கும் மாமன்னன்… இன்னும் முடியாத வெளிநாட்டு பிஸ்னஸ்!
, வியாழன், 15 ஜூன் 2023 (08:11 IST)
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது.

இந்த படம் பக்ரீத் பண்டிகையன்று ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் இன்னும் வெளிநாட்டு விற்பனை முடியவில்லை என சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான கலகத் தலைவன் படம் வெளிநாட்டு விநியோகஸ்தருக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாம். அதனால் இப்போது மாமன்னன் படத்துக்கு சொல்லும் பெரிய விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் யோசிப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரிஷ்யம் 3 உருவாக்கம்… சஸ்பென்ஸ் குறையாமல் இருக்க புதிய திட்டம்!