உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்ற முன்னொட்டோடு உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார்.
படம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். படத்தின் பாடல்கள் வெளியாகி ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கொடி பறக்குற காலம் பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றுள்ள போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.