Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவர் மகன் க்ளைமேக்ஸில் என்னையும் தாங்கி பிடித்தவர் வடிவேலு – கமல் புகழாரம்!

தேவர் மகன் க்ளைமேக்ஸில் என்னையும் தாங்கி பிடித்தவர் வடிவேலு – கமல் புகழாரம்!
, வெள்ளி, 2 ஜூன் 2023 (14:22 IST)
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்ற டேக்கோடு உருவாகியுள்ளது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. படம் ஜூன் மாதம்  29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் பல பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். விழாவில் சிறப்பு விருந்தினராக உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அவர் பேசும்போது “இந்தியா எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும் தலைமுறையாக நாம் உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் “வடிவேலு இந்த படத்தில் மாமன்னனாக தெரிகிறார்.  தேவர் மகன் க்ளைமேக்ஸில் என்னுடைய காட்சியையும் சேர்த்து தாங்கிப் பிடித்தவர் அவர். இந்த படம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என ஆசைப்படுகிறேன்.” என வடிவேலுவை புகழ்ந்து பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தா நடிக்கும் ஆங்கில படத்தின் தலைப்பு அறிவிப்பு!