இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது பிரதீப் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.
இதையடுத்து இப்போது மீண்டும் ஏ ஜி எஸ் நிறுவனத்துக்காக ப்ரதீப் படம் இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக லவ் டுடே படத்துக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவே ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.