Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!
, புதன், 28 டிசம்பர் 2022 (09:12 IST)
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் இப்போது படத்துக்கான பாடல் பதிவு தற்போது நடந்து வருவதாக ஜி வி பிரகாஷ் புகைப்படத்தோடு பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகி பாபு வீட்டு விசேஷத்தில் அமைச்சர் மா சுப்ரமண்யன்!