Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்… ப்ரதீப் வேடத்தில் நடிக்கப் போகும் நடிகர்!

லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்… ப்ரதீப் வேடத்தில் நடிக்கப் போகும் நடிகர்!
, திங்கள், 2 ஜனவரி 2023 (09:05 IST)
லவ் டுடே படத்தின் மூலம் புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் ப்ரதீப் ரங்கநாதன்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த சூப்பர் ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். அந்த படத்தில் ப்ரதீப்பின் வேடத்தில் பாலிவுட் இளம் ஹீரோ வருண் தவான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3.4 கோடி பார்வையாளர்களைக் கடந்த துணிவு டிரைலர்!