Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லவ் டுடே படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

லவ் டுடே படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
, சனி, 29 அக்டோபர் 2022 (10:29 IST)
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கி இருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு லவ் டுடே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் 20 வருடங்களுக்கு முன்பு விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இயக்குனர் மாருதியோடு இணைந்த பிரபாஸ்… வெளியான அறிவிப்பு!