பிளாக்கில் டிக்கெட் வாங்கி, அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி, லியோ படத்தை பார்க்க வேண்டாம் என்றும் முதல் நாள் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பொறுமையுடன் அடுத்தடுத்த நாட்களில் லியோ படத்தை அதற்குரிய கட்டணம் கொடுத்து பாருங்கள் என்றும் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் அறிவுரை கூறியுள்ளார்.
லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை ரசிகர்கள் அதிக விலை கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்க வேண்டாம் என்று சொல்லி நமது தினசரி வேலைகளுக்கு நடுவே பொழுதுபோக்கிற்காக பார்க்கும் படத்திற்கு அவ்வளவு செலவு மற்றும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
முதல் நாளில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பொறுமையாக காத்திருந்து அடுத்தடுத்து காட்சிகளில் படம் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்