Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய் கிடையாது.. ‘லியோ’ பேட்டியில் லோகேஷ்..!

கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய்  கிடையாது.. ‘லியோ’ பேட்டியில் லோகேஷ்..!
, புதன், 18 அக்டோபர் 2023 (17:23 IST)
‘லியோ’ படத்தில் கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய்  கிடையாது, அந்த கதாபாத்திரம் தான் என ‘லியோ’ படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளர்.
 
மேலும் ’லியோ’ திரைப்படம் நடந்ததற்கான காரணமே மாஸ்டர் படம் தான் என கூறிய லோகேஷ், ‘லியோ’படத்தின் ட்ரெய்லரில் வந்த ஆபாச வசனத்திற்கு நானே  பொறுப்பு, அதற்கு எதிர்ப்பு வந்த உடனே மியூட் செய்துவிட்டோம் என்று கூறினார். மேலும் கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய்  கிடையாது, அந்த கதாபாத்திரம் தான், அந்த வார்த்தை கட்டாயம் திரையில் வராது என்றும் தெரிவித்தார்,.
 
மேலும் படத்தில் அதிகளவில் போதை மற்றும் ஆக்ஷன் காட்சிகளை காட்டுவது அதை நிறுத்துவதற்காகவே தவிர ஊக்கப்படுத்த அல்ல என்றும், இது போன்ற விஷயங்களை விஜய் போன்ற பெரிய நடிகர்கள் சொல்லும்போது அது மக்களிடம் பெரியளவில் சென்று சேரும் என்ற நோக்கத்தில் தான் இந்த  கருத்துகளை சொல்கிறோம்” என்றும்  இயக்குநர் லோகேஷ் கனராஜ் தனது பேட்டியில் தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பானை அழிக்க முடியாதுடா’: கார்த்தியின் ‘ஜப்பான்’ டீசர்..