தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இன்று அதிகாலை தனது சமூக வலைதள பக்கத்தில் லியோ படத்தை பார்த்து ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில் தளபதி விஜய், லோகேஷ், அனிருத் உள்ளிட்டோருக்கு தனது பாராட்டை தெரிவித்த நிலையில் LCU என்றும் குறிப்பிட்டு இருந்தார்
இதனை அடுத்து சமூக வலைதளங்களில் லியோ திரைப்படம் LCU படம் தான் என்று உறுதியாக ரசிகர்கள் நம்பினர். மேலும் பல ஊடகங்களில் லியோ திரைப்படம் LCU படம் என்பதை உதயநிதி உறுதி செய்து விட்டார் என செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இன்று பேட்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் உதயநிதி போட்ட பதிவில் LCU பக்கத்தில் கண்ணடிக்கிற எமோஜி போட்டிருந்தார் கவனிச்சிங்களா? சோ அது உண்மையா பொய்யா என நாளை காலை தான் தெரியவரும் உங்களுக்கு என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து மீண்டும் லியோ திரைப்படம் LCU படமா அல்லது LCU இல்லாத படமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்துள்ளது. இருப்பினும் நாளை காலை இந்த கேள்விக்கான விடை தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது