இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத். பல வெற்றிப்படங்களைக் கொடுத்து ஆக்ஷன் ஹீரோவாகக் கலக்கியவர். தற்போது சஞ்சய் தத் இந்தி மட்டுமல்லாது அனைத்து மொழி படங்களிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.
முக்கியமாக கேஜிஎஃப் படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் இவருக்கு வில்லன் கதாப்பாத்திரங்கள் அதிகமாக கிடைக்கிறது. அப்படியாக கடந்த சில ஆண்டுகள் முன்னதாக வெளியான விஜய்யின் லியோ படத்திலும் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் அவரது வேடம் படத்தில் பெரியத் தாக்கம் எதையும் ஏற்படுத்தாமல் வழக்கமான டெம்ப்ளேட் சினிமா வில்லனாக மட்டுமே இருந்தது.
இந்நிலையில் இதுபற்றி சமீபத்தில் ”கே டி: தி டெவில்” பட நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் தத் “நான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன். லியோ படத்தில் எனக்கு பெரிய கதாப்பாத்திரம் கொடுக்கவில்லை. என் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்று பேசியிருந்தார். இந்நிலையில் சஞ்சய் தத்தின் இந்த பேச்சு பற்றி பேசியுள்ள லோகேஷ் “அந்த நேர்காணல் வைரல் ஆனதும் சஞ்சய் சார் எனக்கு போன் செய்தார். நான் சும்மா விளையாட்டுக்காகதான் அதை சொன்னேன். ஆனால் வேறு மாதிரி ஆகிவிட்டது. எனக்கு சங்கடமாக உள்ளது” என்றார்.
நான் ஒன்றும் பிரச்சனை இல்லை சார் என்றேன். நான் ஒன்றும் மேதையோ சிறந்த இயக்குனரோ இல்லை. என் படங்களில் நிறைய தவறுகள் செய்துள்ளேன். அதிலிருந்து கற்றுக்கொண்டு வருகிறேன். மீண்டும் சஞ்சய் தத்துடன் இணைந்து படம் பண்ணுவேன்” எனக் கூறியுள்ளார்.