ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய ஹிட் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. துறைமுகப் பின்னணியில் தங்கக் கடத்தல் பற்றிய படமாக கூலி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது தனிப்பாடலாக மோனிகா என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் சிறப்புத் தோற்றத்தில் பூஜா ஹெக்டே கவரச்சி நடனமாடியுள்ளார். இந்த பாடலில் பூஜாவோடு சேர்ந்து மலையாள நடிகரான சௌபின் சாஹீர் துள்ளலான நடனத்தை ஆடியுள்ளார். பாடலின் லிரிக் வீடியோ பார்த்த ரசிகர்கள் பலரும் பூஜாவின் கிளாமரை விட சௌபினின் நடனம் இந்த பாடலில் கவனம் ஈர்க்கும் அம்சமாக உள்ளது என சிலாகித்துப் பாராட்டி வருகின்றனர்.