லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றி அவர் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளது. விக்ரம் படத்துக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது.
இப்போது முக்கியமான சில ஆக்ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் எனக் கூறியுள்ளார்.