Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தள்ளிப் போகும் தளபதி 67 பட ப்ரமோஷன் வீடியோ ரிலீஸ்

தள்ளிப் போகும் தளபதி 67 பட ப்ரமோஷன் வீடியோ ரிலீஸ்
, புதன், 25 ஜனவரி 2023 (10:00 IST)
விக்ரம் படத்துக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது.

இப்போது முக்கியமான சில ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோவை லோகேஷ் படமாக்கி இருந்தார். அந்த வீடியோ ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷ் பற்றி பரவிய வதந்தி.. ஆனா இவ்ளோ பெரிய பிளாஷ்பேக் இருக்கா?