Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் விஜய் படம் இயக்கினால் ஹீரோயின், பாடல்கள் இருக்காது: லோகேஷ் கனகராஜ்

மீண்டும் விஜய் படம் இயக்கினால் ஹீரோயின், பாடல்கள் இருக்காது: லோகேஷ் கனகராஜ்
, ஞாயிறு, 10 ஜனவரி 2021 (17:10 IST)
விஜய் நடித்த மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் ஹீரோயின், பாடல்கள் மற்றும் சண்டைகள் இருக்காது என்று அவர் கூறியுள்ளார் 
 
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார். இந்த படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் தனது குழுவினருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று மாஸ்டர் வெற்றிக்காக வழிபாடு செய்துள்ளார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ் ’மாஸ்டர் திரைப்படம் விஜய் விஜய்யின் பாணியில் 50 சதவீதமும் என்னுடைய பாணியில் 50 சதவீதமும் இருக்கும் என்றும் ஆனால் இந்த படம் வெற்றி பெற்று விட்டு மீண்டும் விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் 100% என்னுடைய பாணியில் அவரை வைத்து படம் எடுப்பேன் என்றும் கூறினார் 
 
மீண்டும் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அந்த படத்தில் பாடல்கள் ஹீரோயின் மற்றும் சண்டை காட்சிகள் இருக்காது என்றும் ரசிகர்கள் ஒரு வித்தியாசமான விஜய்யை பார்ப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட முதல் நடிகை இவர்தான்!