Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி போராட்டத்தில் நுழைந்த அஜித், விஜய் ரசிகர்கள்! – பரபரப்பாகும் போராட்டம்

ரஜினி போராட்டத்தில் நுழைந்த அஜித், விஜய் ரசிகர்கள்! – பரபரப்பாகும் போராட்டம்
, ஞாயிறு, 10 ஜனவரி 2021 (12:09 IST)
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் அஜித், விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அதற்கான பணிகள் கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஜனவரியில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இடையே ரஜினிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “ஆன்மீக அரசியல் அழைப்பு விழா” என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அஜித், விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித், விஜய் படங்கள் தாக்கிய பேனர்களோடு போராட்ட களத்தில் அவர்களது ரசிகர்கள் கலந்து கொண்டுள்ள படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 24 மணி நேரத்தில் அடை மழை! – 10 மாவட்டங்களுக்கு அலர்ட்!