Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகா யூனிவர்ஸின் ரகசியங்களை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்!

vinoth
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (10:12 IST)
துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான  ‘லோகா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படம் மோகன்லாலின் ‘ஹ்ருத்யபூர்வம்’ திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.  படம்  தற்போது 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மைல்கல்லை 13 நாட்களில் லோகா எட்டியுள்ளது. இதன் மூலம் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த நான்காவது படம் என்ற சாதனையை தற்போது பெற்றுள்ளது.

இந்நிலையில் லோகா படத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள பல ரகசியங்களை இன்று மாலை வெளியிடவுள்ளது படக்குழு. லோகா அடுத்தடுத்து ஐந்து பாகங்களாக உருவாகவுள்ளது. அதில் துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், சௌபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று யார் யார் எந்த கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து வழக்கு முடிவு…!

திடீரென ‘காந்தாரா 1’ க்கு ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பலை… பின்னணி என்ன?

பிரபாஸ் பட ரிலீஸால் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு வந்த சிக்கல்!

புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும் சூர்யா… பா ரஞ்சித்துடன் கூட்டணி!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் இணைந்த சிம்பு… ‘தேவரா 2’ அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments