கடந்த 2014 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் அஞ்சான். ஒரு பெரிய கேங்ஸ்டர் திரைப்படம் ஆக இந்த படம் வெளியானது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் சமந்தா நடித்திருந்தார். படத்தில் அமைந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் ரிலீசுக்கு பிறகு மோசமான விமர்சனத்தையே தழுவியது.
ஆனால் படம் பார்த்த அத்தனை பேருமே படம் நன்றாக இருக்கிறது என்றுதான் கூறினார்கள். அந்த காலகட்டத்தில் தான் சோசியல் மீடியா வளர்ந்து வரும் நேரம். அப்போது இந்த படம் நெட்டிசன்களின் கைகளில் சிக்க பெரிய ட்ரோலுக்கு ஆளானது. சொல்லப்போனால் மீம்ஸ் மெட்டீரியலுக்கு ஆளான முதல் திரைப்படமாக அஞ்சான் திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில் படத்தில் சில பல மாற்றங்கள் செய்து ரீ எடிட்டிங் எல்லாம் முடிந்து நாளை இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் லிங்குசாமி.
முதல் வெர்சனில் இந்தப் படத்தின் மொத்த ஓட்ட நேரம் இரண்டரை மணி நேரம் . இதில் 30 நிமிடங்களை கட் செய்து இரண்டு மணி நேரமாக புதிய வெர்ஷனில் குறைத்து இருக்கிறார். நேற்று ரசிகர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ஷோவை லிங்குசாமி ஏற்பாடு செய்திருக்கிறார். படம் பார்த்த அத்தனை பேருமே படம் சூப்பராக இருக்கிறது என்று தான் கூறியிருக்கிறார்கள்.
சூர்யாவின் கெயரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் இந்த அஞ்சான் திரைப்படம் தான். அந்த வசூலை இதுவரை சூர்யாவின் எந்த படங்களுமே வசூல் செய்ய முடியவில்லை. இதனுடைய முதல் நாள் கலெக்சன் 11 கோடியாம். அந்த நேரத்தில் படத்தின் தோல்விக்கு நான் தான் முக்கிய காரணம் என்றும் லிங்குசாமி கூறியுள்ளார். ஏனெனில் ரிலீஸ் தேதியை முதலிலேயே முடிவு செய்துவிட்டார்களாம்.
அதனால் அந்த தேதிக்குள் அவசர அவசரமாக முடிக்க வேண்டிய சூழ் நிலை.லிங்குசாமி கூட படத்தை அந்த நேரத்தில் முழுசாக பார்க்கவில்லையாம். அதனால் மறுபடியும் அதே தவறை பண்ணக் கூடாது என புதிய வெர்ஷனில் காட்சிகளை பார்த்து பார்த்து எடிட் செய்திருக்கிறாராம். படத்தை சிவக்குமார் பார்த்து மிகவும் பாராட்டினாராம். ஆனால் சூர்யா தரப்பில் இருந்து இதுவரை எந்தவித ட்விட்டும் வரவில்லை. ஒரு ஃபார்மாலிட்டிக்காவது அவருடைய எக்ஸ் பக்கத்தில் அஞ்சான் ரீ ரிலீஸ் பற்றி சூர்யா பதிவிட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் படத்தை ஒரு நாள் நேரடியாக வந்து பார்க்கிறேன் என சூர்யா சொன்னதாக லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.