Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸுக்கு முந்தைய பிஸ்னஸ்… 2.0 சாதனையை முறியடித்ததா லியோ?

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (13:28 IST)
லியோ படத்தின் முக்கியக் காட்சிகளைக் காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் படமாக்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என தெரிகிறது. அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

லியோ படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில் படத்தின்  வியாபாரம் ஜரூராக நடந்து வருகிறது. ரிலீஸுக்கு முன்பே இந்த படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ரஜினியின் 2.0 படத்தை விட அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைவிட அதிகமாக ஆர் ஆர் ஆர் திரைப்படமும், சலார் திரைப்படமும் மட்டுமே ரிலீஸுக்கு முன்பு அதிக தொகை வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் லோகேஷ் ஆகிய இருவரும் மாஸ்டர் படத்துக்குப் பிறகு லியோ படத்தில் இணைந்துள்ளனர். லோகேஷ் கடைசியாக இயக்கிய விக்ரம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி என்பதால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments