இயக்குனர் லெனின் பாரதி& யோகி பாபு நடிக்கும் படத்துக்கு வித்தியாசமானத் தலைப்பு!

vinoth
புதன், 8 அக்டோபர் 2025 (10:49 IST)
தமிழின் மிகச்சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக வெளியானது மேற்கு தொடர்ச்சி மலை. அந்த படத்தை 6 வருடங்கள் உருவாக்கினார். அதன் இயக்குனர் லெனின் பாரதி. அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

ஆனால் அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த திரைப்படம் தொடங்கப்படவில்லை. படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை சென்ற இயக்குனர் லெனின் பாரதி, அங்கு நடந்த மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார். இதனால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதம் ஆனது.

இந்நிலையில் இப்போது அவர் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். தன்னுடைய இணை இயக்குனர் ராஜ்மோகன் என்பவர் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நான்கு தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், ஒரு முக்கியமான வில்லன் வேடத்தில் நடித்தும் வருகிறார்.  இந்த படத்தில் சார்லி, காளி வெங்கட் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்துக்கு ‘அர்ச்சுனன் பேரு பத்து’ என்ற வித்தியாசமானத் தலைப்பை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொடங்கியது கவினின் ‘மாஸ்க்’ பட வியாபாரம்… டிஜிட்டல் உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

மகுடம் படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வசூலில் பட்டையக் கிளப்பும் ‘ட்யூட்’… மூன்று நாளில் 66 கோடி ரூபாய்!

இரண்டாவது சிம்ஃபொனியை எழுதவுள்ளேன்… தீபாவளி நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசைஞானி!

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments