தீபிகா படுகோனுடன் நான் சண்டை போட்டேனா?... பிரபல நடிகை ஓபன் டாக்!

vinoth
புதன், 8 அக்டோபர் 2025 (10:43 IST)
அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் படங்களின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து பிரபாஸை வைத்து ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் ஆனார். ஆனால் தற்போது ஸ்பிரிட் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் சந்தீப்புடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாகவே தீபிகா வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

இதற்குக் காரணம் தீபிகா படுகோன் ஸ்பிரிட் படத்தின் கதையை வெளியேக் கசியவிட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரின் 8 மணிநேர கால்ஷீட் நிபந்தனைதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.  இதையடுத்து தீபிகா படுகோன் நடிக்க இருந்த வேடத்தில் தற்போது திரிப்தி டிம்ரி நடிக்கவுள்ளார்.

இது சம்மந்தமாக தீபிகாவுக்கும், திரிப்திக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து பேசியுள்ள திரிப்தி “தீபிகா படுகோன் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. சினிமாவுலகில் வாய்ப்புகள் வருவதும் போவதும் சகஜமானதுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படம்: இந்த பிரபல நடிகர் தான் ஹீரோவா?

மாரி செல்வராஜ் - இன்பநிதி' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறதா? என்ன காரணம்?

கரூர் சம்பவ காட்சிகள் ‘ஜனநாயகன்’ படத்தில் வருகிறதா? தீயாய் பரவும் வதந்திகள்..!

மாடர்ன் உடையில் அசத்தும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

சேலையில் சிக்கென்ற போஸில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments