Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார்.

Advertiesment
vasantha
, சனி, 20 மே 2023 (13:40 IST)
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகை வசந்தா     உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகை வி. வசந்தா. இவர், தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டார்ட் எம்.கே. தியாகராஜ பாகவரது நாடகக்குழுவில் இடம்பெற்றவர் ஆவார்.

நாடகத்தில் இருந்து சினிமாவில் நுழைந்த இவர், கமல்ஹாசனின் மூன்றாம் பிறை என்ற படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக நடித்திருந்தார்.  ராணுவ வீரன் என்ற படத்தில், ரஜினியின் அம்மாவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர்  நேற்று மதியம்3.40 மணியளவில் அவரது வீட்டில் காலமானார்.

இன்று பிற்பகல் 1:30 மணியளவில் அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பழம்பெரும் நடிகை வி. வசந்தாவின் மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆத்தாடி... பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?