சமீபத்தில் மீ டூ விவகாரத்தில் இணைந்துள்ள கவிஞர் லீனா மணிமேகலை-சுசிகணேசன் விவகாரம் சம்மந்தமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளிக்க இருக்கிறார் லீனா மணிமேகலை.
பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான இந்தியன் மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை, திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் புகாரை கூறினார் இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டே தான் நேர்கொண்ட பாலியல் அத்துமீறலை பெயர் குறிப்பிடாமல் அவர் பதிவு செய்திருந்தார். அதை தற்போது டிவிட்டர் பக்கத்தில் அவர் மீ டூ ஹேஷ்டேக்குடன் சுசி கணேசனின் பெயரையும் சேர்த்த் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு இன்று மறுப்பு தெரிவித்த இஅயக்குனர் சுசி கணேசன், லீனா மணிமேகலை சொல்வதனைத்தும் பொய் என நிரூபிக்கும் ஆதாரம் தன்னிடம் உள்ளது எனவும், தன்னிடம் மன்னிப்புக் கோராவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்றும் காட்டமாக பதிலளித்துள்ளார்.
இதற்கிடையில் இது சம்மந்தமாக சென்னை ப்ரஸ் கிளப்பில் இன்று மாலை 4 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் லீனா மணிமேகலை. இந்த சந்திப்பின் போது இதுதொடர்பாக மேலும் விவரங்கள் மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.