Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காரில் ஏற சொன்னால் ஏறி விடுவீர்களா? - சுசி கணேசன் காட்டம்

காரில் ஏற சொன்னால் ஏறி விடுவீர்களா? - சுசி கணேசன் காட்டம்
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (10:45 IST)
பெண் எழுத்தாளர் மற்றும் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை தன் மீது சுமத்திய பாலியல் புகார் குறித்து இயக்குனர் சுசிகணேசன் விளக்கம் அளித்துள்ளார்.

 
மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திரைப்பிரபலங்கள் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை கூறி வருகின்றனர்.
 
கவிஞரும், குறும்பட இயக்குனருமான லீனா மணிமேகலை, திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் புகாரை கூறியிருந்தார். தன்னை காரில் ஏற்றிய சுசிகணேசன் தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னிடம் இருந்த ஒரு குறுங்கத்தியை காட்டி அவரிடமிருந்து தப்பித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இதுகுறித்து தனது முகநூலில் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி , வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள். இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்துவிட்டீர்கள்....உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே , ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும்
 
புதுமைப் பெண்ணான நீங்கள் , கத்தியை அந்த அப்பாவி( ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர். அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன்- என்னை கொச்சைப் படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற .metoo-இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் " சமுதாய வைரஸ்களை" களை களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை.
 
Social media நண்பர்களுக்கு-தயவு செய்து metoo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம்கண்டு தவிறுங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள்- உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில், சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார். கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்ப, வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலத்தில் 4200 கூடி செய்த வினோத செயல் - கின்னஸ் சாதனை கிடைக்குமா?