Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 18 April 2025
webdunia

தொடர்ச்சியாக அவமானம் - பாலியல் புகாருக்கு வைரமுத்து பதில்

Advertiesment
Vairamuthu
, புதன், 10 அக்டோபர் 2018 (14:19 IST)
தன் மீதான பாலியல் புகார்கள் குறித்து கவிஞர் வைரமுத்து பதிலடி கொடுத்துள்ளார்.

 
கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
18 வயது இருக்கும் போது பயிற்சிக்காக வைரமுத்துவின் வீட்டிற்கு சென்ற போது அவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் மற்றும் மற்றொரு பெண்ணும் ஏற்கனவே கூறியிருந்த புகார் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு முறை சுவிட்ஸர்லாந்துக்கு பாடல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து எனது அறையில் நானும், எனது தாயும் மட்டுமே இருந்தோம். அப்போது, நிகழ்ச்சி அமைப்பாளர் என்னிடம் வந்து வைரமுத்து அவரின் அறையில் எனக்காக காத்திருப்பதாக கூறினார். இது கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் என ஒரு பதிவிலும், வைரமுத்து பற்றி அவரின் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும். வைரமுத்து சார் நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்களுக்கு தெரியும். சினிமாவில் எனக்கு வாய்ப்பு போனாலும் பரவாயில்லை” என ஒரு டிவிட்டிலும் அவர் பதிவிட்டுள்ளார்.
 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்”என பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளிக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ்: மகிழ்ச்சியில் ரயில்வே ஊழியர்கள்