Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமூக வலைதள தகவல்களை அழித்த முன்னணி நடிகை ! ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
சமூக வலைதள தகவல்களை அழித்த முன்னணி நடிகை ! ரசிகர்கள் அதிர்ச்சி
, சனி, 2 ஜனவரி 2021 (13:11 IST)
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோன்  தனது சமூக வலைதள கணக்குகளில் உள்ள பதிவுகள் அனைத்தையும்  டெலிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபிகா படுகோன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.  அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி அதைத் தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 52 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தனது அனைத்துப் பதிவுகளையும் நீக்கியுள்ளார். அவருடைய பல போட்டொக்கள் பல மில்லியன் லைக்ஸை பெற்றுள்ள நிலையில் நடிகையின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

மேலும், இதுகுறித்து தனது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இவ்வாண்டில் (2020) நாம் அனைவரும் பலவித போராட்டங்களையும் பிரச்சனைகளும் எதிர்கொண்டோம் புது ஆண்டில் அனைவரும் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழவேண்டும் என வாழ்த்துகள் கூறியுள்ளார்.

மேலும் தீபிகா படுகோன் சமீபத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவுடன் இணையும் இயக்குனர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!