Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதைப் பொருள் வழக்கு....பிரபல நடிகரின் வீட்டில் போலீஸார் சோதனை !

Advertiesment
போதைப் பொருள் வழக்கு....பிரபல நடிகரின்  வீட்டில் போலீஸார் சோதனை !
, வியாழன், 15 அக்டோபர் 2020 (17:38 IST)
பாலிவுட்டில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள போதை பொருள் பயன்பாடு குறித்து இப்போது விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த விவேக் ஓபராய் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார். ரியா சுஷாந்திற்கு போதை பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட விசாரணையில் மேலும் பல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பல முன்னணி நடிகர், நடிகைகள் பெயர் அடிப்படும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ஷ்ரதா கபூருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சுஷாந்த் சிங்குடன் “சிச்சோரே” என்ற படத்தில் நடித்தவர் ஷ்ரதா கபூர். சுஷாந்தின் விருந்தினர் இல்லத்தில் போதை பார்ட்டிகள் நடைபெற்றதாகவும், அதில் ஷ்ரதா கபூரும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் மேலும் தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் பயன்பாடு பற்றிப் பேசிக்கொள்ள உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்புக்கு அட்மினாக தீபிகா படுகோன்தான் இருந்தார் என சொல்லப்படுகிறது.

 இந்த நிலையில், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு முகமை சம்மன் அனுப்பிய நிலையில் தீபிகா படுகோனே சமீபத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

அத்துடன் அவரத் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷிடம் போதைப்பொருள் தொடர்பான விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. மேலும் வாட்ஸ் மெசேஜ்கள் அனைத்தும் அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தேடப்பட்டுபாலிவுட் நடிகரும் பிரதரம் மோடியுன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தவருமான விவேக் ஓபராயின் உறவினராக ஆதித்யா ஆல்வா என்ற நபருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவர் விவேக் ஓபராயின் வீட்டில் பதுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் தற்போது விவேக் ஓபராயின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’உருட்டுக் கட்டையால் தாக்கி... கத்தியால் வெட்டினார்….’’நாஞ்வில் விஜயன் மீது சூர்யா தேவி புகார்