Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையிலே கொரோனா வந்ததற்கு காரணம் அந்த சிறுவன் தான் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!

Advertiesment
உண்மையிலே கொரோனா வந்ததற்கு காரணம் அந்த சிறுவன் தான்  - லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!
, புதன், 25 மார்ச் 2020 (14:13 IST)
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 562 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. 10 பலி பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.  மக்களின் நலன் கருதி இந்திய அரசு மேலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தனிப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பாதுகாப்பதுடன் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் விழிப்புணர்வு அறிவுரைகளை கூறிவருகின்றனர்.

அந்தவகையில் தற்போது சொல்வதெல்லாம் புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது  ட்விட்டர் பக்கத்தில்  "சிரியா பயங்கரவாத தாக்குதலின் போது  சிறுவன் ஒருவன் "நான் கடவுளிடம்  இது எல்லாவற்றையும் சொல்கிறேன் பாருங்கள்"  என சொல்லியிருந்ததை குறிப்பிட்டு,  அவன் உண்மையிலேயே சொல்லி விட்டான் போல் தோன்றுகிறது. நம்முடைய எல்லா வேறுபாடுகளையும் நாம் சிந்திக்க வேண்டும் மற்றும் சேதத்தை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும். தற்போது நாம் அனைவரும் மனிதநேயத்திற்கு திரும்ப வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டுல ஒரே போரிங் அதான்... திஷா பதானி செய்த வேலைய பாருங்க - வீடியோ!