Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் தற்கொலை வழக்கு – முன்னாள் காதலி ரியாவுக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (07:44 IST)
சுஷாந்தின் தற்கொலை சம்மந்தமான வழக்கில் அவரின் முன்னாள் காதலி ரியாவுக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தின் திடீரென கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என அவரது தந்தை நடிகை ரியா மீது போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டதையடுத்து நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சுஷாந்த் போதை மருந்துக்கு அடிமைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதாவது இவரது முன்னாள் காதலில் ரியா, சுஷாந்திற்கு தேநீரில் சில துளிகள் போதை மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரியா தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ரியா ஒரு நாளும் போதை மருந்தை உட்கொள்வில்லை எனறும் ரத்த பரிசோதனைக்கும் அவர் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில ஊடகங்களிலும் பாலிவுட்டிலும் ரியாதான் குற்றவாளி போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை டாப்ஸி ரியாவுக்கு ஆதரவாக ‘எனக்கு தனிப்பட்ட முறையில் சுஷாந்த் மற்றும் ரியா இருவரையும் தெரியாது. ஆனால் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாதவரை, குற்றமசாட்டுவது தவறு என்று தெரியும். இதைப் புரிந்துகொள்ள மனிதம் இருந்தால் போதும்.  இறந்தவரின் கண்ணியத்துக்காக உங்கள் நாட்டின் சட்டத்தை நம்புங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments