அப்போ இதுவும் அப்பட்டமான காப்பி தானா...? குட்டி கத பங்கமான ட்ரோல் வீடியோ!

சனி, 15 பிப்ரவரி 2020 (14:23 IST)
தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் என பெயரெடுத்து உச்ச நடிகர்கள் பலரது படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் தனுஷ் , விஜய் , ரஜினி , அஜித் என அனைத்து டாப் நடிகர்களின் படங்களுக்கும் துள்ளலான இசையை கொடுத்துள்ளார். 
 
அந்தவகையில் தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.  காதலர் தினமான நேற்று இப்படத்தில் இடம்பெறும் " ஒரு குட்டி கத" என்ற பாடல் வெளியானது. இப்பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கூடவே எதிர்மைறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 
 
அதாவது, இப்பாடலை அனிருத் காப்பி அடித்திருப்பதாக கூறி சமூகலைத்தளங்களில் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். எங்கிருந்து இப்பாடல் காப்பியக்கப்பட்டுள்ளது என தேடி பார்த்ததில் வடிவேலு நடித்திருந்த ராஜகாளியம்மன் படத்தில் வரும் "சந்தன மல்லிகையில்" என்ற பாடலின் ஜெராக்ஸ் போன்று பிசிறு மாறாமல் அப்டியே இருக்கிறது குட்டி கத பாடல். நீங்களே இதை கேட்டு பாருங்கள்...

Ennada Lyrics , voice um nalla irukunu nenacha

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் காதலியுடன் நெருக்கமாக காதலர் தினத்தை கொண்டாடிய விஷ்ணு விஷால் - கேட்டால் தோழியாம்