Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரிசையாக புகைப்படங்களை இறக்கும் கே ஜி எப் 2 படக்குழு – மாஸ் லுக்கில் ராக்கி பாய்!

வரிசையாக புகைப்படங்களை இறக்கும் கே ஜி எப் 2 படக்குழு – மாஸ் லுக்கில் ராக்கி பாய்!
, செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:48 IST)
கே ஜி எப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

எப்போது வரும் என்று இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிது எதிர்பார்க்கப்படும் படமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2ன் புதிய அப்டேட் ஒன்றை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. யஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதீரா பாத்திரத்தில் சஞ்சய் தத் நடிப்பது உறுதியான நிலையில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் இப்போது படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இப்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் படம் குறித்து புகைப்படங்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக படத்தின் கதாநாயகன் யாஷின் புகைப்படத்தை இப்போது வெளியிட்டுள்ளனர். மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் யாஷின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அருவா’ என்றைக்கு இருந்தாலும் சூர்யாவுக்குத்தான்: ஹரி தரப்பு தகவல்!