Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியை கொன்றுவிட்டு கேம் விளையாடிய கொடூரன்! – ஜோத்பூரில் பரபரப்பு!

Advertiesment
மனைவியை கொன்றுவிட்டு கேம் விளையாடிய கொடூரன்! – ஜோத்பூரில் பரபரப்பு!
, செவ்வாய், 8 டிசம்பர் 2020 (12:42 IST)
ராஜஸ்தானில் கணவன் ஒருவர் தனது மனைவியை கொன்று விட்டு சடலத்தின் அருகே அமர்ந்து வீடியோ கேம் விளையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் உள்ள பிஜேஎஸ் காலணியில் வசித்து வருபவர் விக்ரம் சிங். இவருக்கு ஷிவ் கன்வார் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வேலையிழந்த விக்ரம் சிங் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது மனைவி மட்டும் வேலைக்கு சென்று வீட்டிற்கான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார். இதனால் தம்பதியரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த விக்ரம் சிங் தனது மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார். பிறகு தனது மாமனார் வீட்டிற்கும், காவல் நிலையத்திற்கும் போன் செய்து தான் தனது மனைவியை கொன்று விட்டதாக கூறியுள்ளார். போலீஸார் அங்கு சென்ற போது தன் மனைவியின் சடலம் அருகே அமர்ந்து விக்ரம் சிங் மும்முரமாக செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்திருக்கிறார்.

அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவர் தான் செய்த குற்றம் குறித்த பிரக்ஞை இல்லாமல் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவரை மனோதத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் ஜோத்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக்டாக்கிற்கு இனி தடையில்லை; ட்ரம்ப்பை ஆஃப் செய்த நீதிமன்றம்!