24 மணிநேரத்தில் 10 கோடி பேரால் பார்க்கப்பட்ட கே ஜி எப் 2 டீசர்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (10:01 IST)
கேஜி எப் 2 படத்தின் டீசர் 10 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்கள் இடையே அந்த படத்துக்கு இருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் வெளியானது.

வெளியாகி 24 மணி நேரர்த்தில் இந்த டீசரை 10 கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும் இந்த டீசர் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையையும் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் இந்த படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments