Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 13 January 2025
webdunia

உருக்கமான ”அகிலம் நீ” … வெளியானது கேஜிஎப் 2 அடுத்த சிங்கிள்!

Advertiesment
உருக்கமான ”அகிலம் நீ” … வெளியானது கேஜிஎப் 2 அடுத்த சிங்கிள்!
, புதன், 6 ஏப்ரல் 2022 (15:44 IST)
கேஜிஎப் 2 படத்தில் இடம்பெற்றுள்ள அகிலம் நீ என்ற பாடல் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் முதல் சிங்கிள் பாடலான டூஃபான் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆனது. அதையடுத்து இப்போது அம்மா செண்ட்டிமெண்ட் பாடலான அகிலம் நீ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாத்தி இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்து பகிர்ந்த தனுஷ்… viral pic!