Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் லிரிக் வீடியோ …. எதிர்பார்ப்பை எகிற வைத்த கேஜிஎப் 2 அப்டேட்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (16:00 IST)
இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது கேஜிஎப் 2 திரைப்படம்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலிஸ் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில் வரும் மார்ச் 21 ஆம் தேதி காலை 11.07 மணிக்கு படத்தில் இடம்பெற்றுள்ள TOOFAN என்ற பாடலின் லிரிக் வீடியோவை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments