பாலா சூர்யா படத்தில் சுதா கொங்கரா… என்ன செய்கிறார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (15:50 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக சுதா கொங்கரா பணியாற்ற உள்ளாராம்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர்.

இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த படத்தை நடித்து தயாரிக்க உள்ளார் சூர்யா. இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்துவரும்.மார்ச் மாதம் 18 ஆம் தேதி படப்பிடிப்பு மதுரையில் தொடங்குகிறது. மூன்றே மாதத்தில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையிலும் கோவாவிலும் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்ற உள்ளாராம். இவர் ஏற்கனவே பாலாவின் பரதேசி படத்தில் இணை இயக்குனராகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments