கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
ஞாயிறு, 9 நவம்பர் 2025 (20:50 IST)
ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துப் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார் கீர்த்தி சுரேஷ். அதே நேரம் தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள ’நடிகையர் திலகம்’ மற்றும் ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘ரகுதாத்தா’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தென்னிந்திய சினிமாத் தாண்டி அவர் பாலிவுட்டிலும் ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் கால்பதித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்தபடம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் தொடர்ந்து அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்லிடையில் அவர் நடித்து சில ஆண்டுகள் ஆகியும் ரிலீஸாகாமல் இருந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நவம்பர் 28 ஆம் தேதி ரிவால்வர் ரீட்டா திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏழைக்கு கோபம் வந்தால் நேரடியாக அடிப்பான்; ஆனால், பணக்காரனுக்குக் கோபம் வந்தால்.. கவினின் ‘மாஸ்க்’ டிரைலர்..!

நாகார்ஜூனா படம் ரீரிலீஸ்.. சிரஞ்சீவியிடம் மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா.. என்ன காரணம்?

900 கோடி ரூபாய் வசூலை நெருங்கிய காந்தாரா-1… ஓடிடி ரிலீஸுக்குப் பிறகும் தொடரும் கலெக்‌ஷன்!

மீண்டும் தூசு தட்டப்படும் வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’… ரிலீஸ் அப்டேட்!

ஆட்டோகிராஃப் படத்தில் காதல் என்பது வெறும் கருவிதான்… சேரன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments