Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலுக்காக 15 ஆண்டுகள் காத்திருந்தோம்… கணவர் பற்றி மணம் திறந்த கீர்த்தி!

Advertiesment
கீர்த்தி சுரேஷ்

vinoth

, செவ்வாய், 14 அக்டோபர் 2025 (15:34 IST)
ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துப் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார் கீர்த்தி சுரேஷ். அதே நேரம் தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள ’நடிகையர் திலகம்’ மற்றும் ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘ரகுதாத்தா’ போன்ற படங்களிலும் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் தென்னிந்திய சினிமாத் தாண்டி அவர் பாலிவுட்டிலும் ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் கால்பதித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்தபடம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் தொடர்ந்து அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தன்னுடைய காதல் மற்றும் திருமணம் குறித்துப் பேசியுள்ள கீர்த்தி “நாங்கள் இருவரும் பள்ளி நாட்களில் இருந்தே காதலித்தோம். இருவரும் வெவ்வேறு மதங்கள் என்பதால் தயங்கினோம். ஆனால் நான்காண்டுகளுக்கு முன்னால் என் அப்பாவிடம் சொன்னபோது என் விருப்பம்தான் முக்கியம் என்றார். 15 வருடக் காதல் வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்தோம். இப்போது திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி ரிலீஸூக்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேட்டார்கள்… டீசல் படம் குறித்து ஹரிஷ் கல்யாண் ஆதங்கம்!